vimசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் விமல் பற்றீசியா தம்பதிகளின் செல்வப்புதல்வி றமோனா இன்று தனது பதினெட்டாவது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுகின்றார்.
இவரை அப்பா அம்மா தம்பி அலெக்ஸ் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்.
ஆனைக்கோட்டை  இணையமும் நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றது.

பதினெட்டில்
பாதம் பட்டு
பாவையே
பாரைத்தொட்டு
பார்ப்பவர்
கண்கள் பட்டு
பாரில்
வாழும் சிட்டு

இன்று பதினெட்டு
இனிமையாய்
வாழ்த்திட்டு
வாழ்த்துகிறோம்
மனம் விட்டு
வாழ்க நீ என்றும்
வான் மேகம் தனைத்தொட்டு.

வாழ்த்துகிறோம் ஆனைக்கோட்டை
மண்தொட்டு..

Comments