pe

KITCHENER, Ont.- தனது பராமரிப்பில் இருந்த இரண்டு இளம் பிள்ளைகளுக்கு நஞ்சு செலுத்தினார் என்ற குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர் மீது தற்போது, பிறந்த குழந்தை ஒன்று உட்பட 6 கைக்குழந்தைகள், நடை குழந்தைகள் மற்றும் ஒரு வயது வந்தவர் ஆகியோர்களுக்கும் நஞ்சு செலுத்தினார் என்ற குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன.
இப் பெண் 2009-2011 Kitchener, Ont.வில் வீட்டு குழந்தை பராமரிப்பை நடாத்தி வந்துள்ளார். இவரது குற்றச்சாட்டுக்களை விசாரனை செய்து வந்தபோது புதிய குற்றங்களும் தெரியவந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புதிய குற்றச்சாட்டுக்களுடன் சேர்த்து தற்போது 8 பிள்ளைகளுடன் 32 வயதுடைய ஒருவருக்கும் நஞ்சூட்டியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் Kitchener அல்லது Guelph ஐ சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர், மருத்துவரின் சீட்டு மற்றும் அனுமதி பத்திரம் எதுவும் தேவையற்று வாங்கக் கூடிய Tetrahydrozoline எனப்படும் கண்ணிற்கு விடும் சொட்டு மருந்தை வாங்கி இவர்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உட்செலுத்துவதனால் அசாதாரணமான தூக்க கலக்கம், இரத்த அழுத்த குறைபாடு, மூச்சுத்திணறல், இருதய துடிப்பு குறைபாடு, போன்றன ஏற்படலாம். விசேடமாக இளம் பிள்ளைகள் பெருமளவில் பாதிக்கப் படுவார்கள்.
பிறந்து ஒருநாள் மட்டும் ஆன குழந்தைகள் தொடக்கம் 2-வயது நிரம்பிய குழந்தைகளுக்கு கடந்த வருடங்களில் இது கொடுக்கப் பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் இந்த பெண்ணின் பராமரிப்பில் இருந்த குழந்தை சுகயீனம் அடைந்த போது ஏற்பட்ட சந்தேகத்தின் பின்னரே தங்கள் கவனத்திற்கு வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேற்குறிப்பிடப்ட்ட கண்ணிற்கு விடும் சொட்டு மருந்து சந்தேக நபரின் பராமரிப்பில் இருந்த 8 பிள்ளைகளுக்கும் ஒரு வயதானவருக்கும் எவ்வாறு நச்சுத்தன்மையை ஏற்படுத்தியதென்ற விபரங்களை தங்களால் வெளியிட முடியாதென்றும் நீதிமன்றமே அதனை வெளியிடும் என்றும் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
32-வயதுடைய Christine Allen என்பவர் மீது நச்சுத்தன்மை வாய்ந்த பொருளை பிரயோகித்தமை ,உடலியலான துன்பங்களை ஏற்படுத்தியமை போன்ற குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன.
இவர் நடத்தி வந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு பெயர் எதுவும் இல்லை என்றும் எத்தனை பிள்ளைகள் அவரது பராமரிப்பில் இருந்தார்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2010 யூலை மாதம் இவரின் பராமரிப்பில் இருந்த மேலும் இரண்டு பிள்ளைகளுக்கும் மேற்கூறப்பட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக புலன்விசாரனையாளர்கள் கண்டுபிடித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
காவலில் வைக்கப் பட்டிருக்கும்Allen நவம்பர் மாதம் 1ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்.

Comments