ka

கல்லறை பேசுகின்றது

கல்லறை பேசுகின்றது
காவியங்கள் பாடுகின்றது!
சொல்லப்பல எண்ணுகின்றது
சோகக்கதையாய் உள்ளது!

கடல் புலியின் கதை சொல்ல
கரும்புலிகள் எழுந்து மெல்ல
அண்ணன்மாரின் கதை சொல்ல
ஆசை எனக்கென்று மெல்ல

மில்லரின் கதை சொல்வேன்
வீரமிகு செயல் சொல்வேன்

தன்னுடலில் குண்டுகட்டி
மண்ணுயிரைக் காக்க
தன்னுயி‌ரை மாய்க்க
தயங்காமல் முதலில் சென்றவரே
எம்முயிரைக் காக்கவன்றோ
எத்துயர் தான் பட்டவரோ
என்று ஒரு கல்லறையும்
இப்படித்தான் உரைத்ததுவாம்

கவியாக்கம்: ஆனைக்கோட்டை தமிழ்நேசன்

Comments