i

வலிகாமம் கல்வி வலயத்தில் வேலை செய்யும் சிற்றூழியரின் பச்சை நிற ஆட்டோவில் கடந்த சனிக்கிழமை காலை 23.11.2013 அன்று காலை 6 மணியளவில் பாடசாலையின் உணவுக் களஞ்சியத்தில் இருந்து மூன்று மூடைகள் அரிசியை

இணுவில் மத்திய கல்லூரி அதிபர் ந.சிவநேசன் கடத்திச் செல்ல முற்பட்ட போது பாடசாலைக்கு முன்னால் உள்ள கடைக்காரர் ஒருவர் சந்தேகப்பட்டு ஆட்டோவை மறித்துச் சோதனை செய்துள்ளார். சிற்றூழியரான ஆட்டோச்சாரதி சமாளிக்க முற்பட்ட வேளை ஆட்டோவின் சாவியைப் பூட்டிக் கடைக்காரர் எடுத்துள்ளார்.

பின்னர் அதிபர் கடைக்காரருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். எனினும் கடைக்காரர் கடத்த விடவில்லை. அதிபரும் சிற்றூழியரும் அரிசி மூடைகளைக் காவி மீண்டும் களஞ்சியத்திற்குள் கொண்டு போய்ச் சேர்த்தனர். அதன் பின்னர் விடயத்தை வெளியில் கூறிவிட வேண்டாம் எனவும்,  ஆட்டோத் திறப்பைத் தருமாறும் கடைக்காரரிடம் கெஞ்சி மன்றாடியுள்ளார்  அதிபர் .  கடும் எச்சரிக்கையுடன் கடைக்காரர் திறப்பைக் கொடுத்துள்ளார். கடைக்காரரின் சமூகப்பற்றுப் பாராட்டத்தக்கது.

Comments