th

யாழ். உடுவில் பகுதியில்  காலை 9.45 மணியளவில் பெண்ணொருவர், வீட்டில் தனிமையிலிருந்த பெண்ணை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திவிட்டு நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு முன்னாலுள்ள மரண வீட்டில் கலந்துகொண்டவர்கள் தாலிக்கொடியை அறுத்துச் சென்ற பெண்ணை துரத்திப் பிடித்து சுன்னாகம் பொலிஸில் ஒப்படைத்தனர்.

தாலிக்கொடி மீட்கப்பட்டது. கத்தி குத்துக் கிலக்காகி காயத்திற்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

Comments