ban

யாழ் திருநெல்வேலிச் சந்தியிலுள்ள ஹட்டன் நஷனல் வங்கி கிளையில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 5 மணியளவில் வங்கியின் உள்ளே தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனை அவதானித்தவர்கள் இது தொடர்பாக உடனடியாகவங்கியினருக்கு அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார்   இணைந்து தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனா.

குளிரூட்டியில் ஏற்பட்ட மின்சாரக் கசிவே இத் தீ விபத்துக்கான காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக எந்த தகவல்களும்  வெளியாகவில்லை. என வங்கியிக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments