fight2

இத்தாலியில் இரண்டு இலங்கைக் குழுக்களுக்கு இடையில் மோதல் சம்வமொன்று இடம்பெற்றுள்ளது.

இத்தாலியின் பிரென்ஸீ நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இலங்கைக் குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதல் சம்பவத்தில் ஆறு இலங்கையர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 20 பேரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீண்ட காலமாக இரண்டு குழுக்களுக்கு இடையில் நிலவி வந்த முரண்பாடே இவ்வாறு மோதலாக வெடித்துள்ளது.

மோதலைக் கட்டுப்படுத்த ஆறு பஸ்களில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

Comments