junior_hockey_002

ஜூனியர் உலக கிண்ண ஹொக்கி போட்டியில் ஜேர்மன் அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

டெல்லியில் ஆண்களுக்கான 10வது ஜூனியர் உலக கிண்ண ஹொக்கி தொடர் நடந்தது.

இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜேர்மன்- பிரான்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் ஜேர்மனியின் நிக்கோலஸ் வெல்லன் முதல் கோல் அடித்தார்.

இதற்கு 16வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் காஸ்பர்டு பாம்கார்டன் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

முதல் பாதி முடிவில் போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் காஸ்பர்டு பாம்கார்டன் 40வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்தார்.

பின் சுதாரித்துக் கொண்ட ஜேர்மனியின் நிக்கோலஸ் வெல்லன் 44, 46வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார்.

தொடர்ந்து அசத்திய ஜேர்மனி அணிக்கு ஜோனஸ் கோமால்(60வது நிமிடம்), கிறிஸ்டோபர் ரூர்(68வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.

முடிவில், 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 6வது முறையாக (1982, 85, 89, 93, 2009, 13) சாம்பியன் பட்டத்தை வென்றது.

Comments