lotto-293x150

கல்கரி- கல்கரியை சேர்ந்த ரொம் கிறிஸ்ற் என்பவர் லொட்டோவில் 40-மில்லியன் டொலர்களை வென்றுள்ளார். இப்பணத்தை தரும ஸ்தாபனத்திற்கு கொடுக்கப் போவதாக இவர் தெரிவித்துள்ளார்.

புற்று நோய் மிகப்பெரிய ஒரு வியாதி என்றும் தனது மனைவி இரண்டு வருடங்களுக்கு முன் பிப்ரவரி மாதத்தில் புற்று நோயால் இறந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

“நான் கடந்த செப்ரம்பர் மாதம் ஓய்வு பெற்றேன். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் அது போதுமானது. ஆதனால் இப்பரிசு தொகை தருமத்திற்கு போகப் போகின்றது. அதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை” என அவர் கூறியுள்ளார்.

கிறிஸ்ற் தவணைக்கட்டணம் மூலம் மக்ஸ் லொட்டோ மற்றும் லொட்டோ 6-49 விளையாடுபவர். இவர்களின் இலக்கங்கள் வெஸ்ரேன் கனடா லொத்தர் கூட்டுத்தாபனத்தால் இவர்களுக்காக சரிபார்க்கப் பட்டு பரிசு தொகை வென்றிருப்பவர்களுக்கு வழங்கப் படும்.

Prairie-North lotteries பிரதேசத்தில் இவ்வளவு தொகையை வென்ற முதலாவது நபர் கிறிஸ்ர் ஆவார்.

தான் சிறு சிறு தொகைக்கான காசோலைகளை பெற்றுள்ளதாகவும் இத்தகைய பெரிய தொகையை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

Comments