anaik

ஈராக்கில் சர்ச்சுக்கு அருகே நடந்த 2 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 37 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈராக்கில் சுமார் 6 லட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர், இவர்களை குறிவைத்து அல்கொய்தா உள்ளிட்ட சில தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று தலைநகர் பாக்தாத்தின் தோரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது.

ஏராளமான மக்கள் திரண்டிருந்த நிலையில், தேவாலயம் அருகே பயங்கர கார் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள், 38 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அதோரியனில் உள்ள மார்க்கெட் ஒன்றில் பயங்கர குண்டு வெடித்ததில், 11 பேர் உயிரிழந்தனர், 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிகழ்வுக்கு இதுவரையிலும் எவ்வித இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments