pe

அமரர் எபிரகாம் பெனடிக்ற்
(டிக்மன்)
தோற்றம் : 15 செப்ரெம்பர் 1946 — மறைவு : 7 சனவரி 2009
யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எபிரகாம் பெனடிக்ற் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பா “நீங்காத நினைவுகளுடன்” என்று தான் ஆரம்பித்தேன்
ஆனால் அது தவறு காரணம்
நீங்கள் எம்மை விட்டு நீங்கவில்லை
எங்கள் கூடவே வாழ்கிறீர்கள் எம் மனங்களில்
உட்கார்ந்து எம்மை வழி நடத்துகிறீர்கள்
தினமும் என் பிள்ளைகள் தாத்தா தாத்தா
என்று உங்களுடன் தானே விளையாடுகிறார்கள்
அப்பா நீங்கள் எங்கும் போகவில்லை
எம்முடன் தான் இருக்கிறீர்கள்

அப்பா எனக்கு நீங்கள் ஊட்டி வளர்த்த பாசத்தை
என் பிள்ளைகளுக்கும் கொடுக்க முயலுகிறேன்
கை நீட்டி அடிக்காத உங்கள் கண்டிப்பை
என் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லுகிறேன்
அம்மாவிடம் நீங்கள் வைத்த பாசத்தை
என் மனைவியுடன் பகிர்ந்து கொள்கிறேன்
அப்பா நான் என்றும் உங்கள் குட்டி ”அப்பு” தான்
என் கரம் பற்றி வாழ்நாள் முழுவதும்
நேரிய வழியில் வழிநடத்துங்கள் அப்பா..!

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருள்மேரி(இன்பம்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33139838938
றொக்‌ஷன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652109031
பிரசாந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33622359393

Comments