hu

கசிப்பு காய்ச்சியவரை கைது செய்ய சென்ற மது வரி அலுவலரை வீட்டில் நின்ற நாய் கடித்து பதம் பார்த்த சம்பவம் பரந்தன் பகுதியில் இடம் பெற்றுள்ளது .

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் திருட்டு தனமாக குறிப்பிட்ட வீட்டில் கசிப்பு காய்ச்சுவதாக கிடைத்தகவலைத் தொடர்ந்து மதுவரித்தனைககள் அலுவலர் சென்றுள்ளார் .

வீட்டுக்கதவு கயிற்றினால் கட்டப்பட்டு இருப்பதை அவதானித்தவர் கதவு கட்டப்பட்டு இருந்த கயிற்றை அகற்ற முற்பட்டவேளையில் பின்னால் வந்த நாய் குறிப்பிட்ட அலுவலரை கடித்து குதறியுள்ளது .
உடனடியாக குறிப்பிட்ட அலுவலர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார் .
நாயின் கடியினால் குறிப்பிட்ட கசிப்பு காய்ச்சிய நபர் குறிப்பிட்ட இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ள போதிலும் இங்கிருந்து கசிப்பு காய்ச்ச பயன்படுத்திய பரல் மற்றம் சோடா ஒரு தொகுதியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மதுவரித்தனைக்கள் அலுவலரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Comments