fa

பல்­க­லை­க்­க­ழக கற்­கை­நெ­றியை தொடரும் தனது கனவு நிறை­வே­று­வ­தற்­காக பாரி­ச­வாத பாதிப்­புக்­குள்­ளாகி உடல் செய­லி­ழந்து தனது முழு நேர கவ­னிப்பில் இருக்க வேண்­டிய நிலை­யி­லி­ருந்த தந்­தையை அலட்­சியம் செய்து பிரிந்து செல்ல விரும்­பாத மக­னொ­ருவர், தனது தந்­தையை பல்­க­லைக்­க­ழ­கத்தில் தான் தங்­கி­யி­ருந்த அறைக்கு அழைத்து வந்து பரா­ம­ரித்­து­வரும் நெஞ்சை நெகி­ழ­வைக்கும் சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

மத்­திய சீனாவில் அன்­குயி மாகா­ணத்­தி­லுள்ள லியுவான் நகரைச் சேர்ந்த குவோ ஷிஜுன் என்ற 20 வயது இளை­ஞரே இவ்­வாறு தனது தந்­தையை பரா­ம­ரித்­த­வாறு பல்­க­லைக்­க­ழக கல்­வியை தொடர்ந்து வரு­கிறார்.

குவோ ஷிஜுனின் தாயாரும் மன­நலப் பாதிப்­புக்­குள்­ளாகி பிறரின் முழு நேர கவ­னிப்பில் இருக்க வேண்­டிய நிலை­யி­லுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதன் கார­ண­மாக சிறு வய­தி­லேயே தனது தாயாரை பரா­ம­ரிக்க வேண்­டிய நிலைக்கு குவோ ஷிஜுன் உள்­ளானார்.
இந்­நி­லையில் நிர்­மாண தொழி­லா­ளி­யான அவ­ரது தந்தை பால­மொன்றில் பணி­யாற்­றிய வேளை 30 அடி உய­ரத்­தி­லி­ருந்து தவறி கீழே விழுந்­ததால் படு­கா­யத்­துக்­குள்­ளாகி பாரிச வாத பாதிப்­புக்­குள்­ளானார்

இதனால் ஏற்­க­னவே தனது தாயாரைக் கவ­னிக்க வேண்­டிய நிலை­யி­லி­ருந்த குவோ ஷிஜுனின் பொறுப்பு இரு மடங்­காக அதி­க­ரித்­தது.
அள­வுக்­க­தி­க­மான குடும்ப பாரத்தை சுமக்க நேரிட்ட போதும், தனது கல்­வியை கைவி­டாத அவர் சீனா­வி­லுள்ள முன்­னணி பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரி­வானார்.

இத­னை­ய­டுத்து குடும்ப பொறுப்­புக்­காக பல்­க­லைக்­க­ழக கல்­வியை தியாகம் செய்­வதா அல்­லது பல்­க­லைக்­க­ழக கல்­விக்­காக குடும்ப பொறுப்பை அலட்­சியம் செய்­வதா என்ற பெரும் குழப்ப நிலைக்கு குவோ ஷிஜுன் உள்­ளானார்.

அவ­ரது மன­நலம் பாதிக்­கப்­பட்ட தாயாரை பரா­ம­ரிக்கும் பொறுப்பை அவ­ரது பாட்­டாவும் பாட்­டியும் ஏற்­றுக்­கொண்ட போதும், பாரி­ச­வாத பாதிப்­புக்­குள்­ளா­கிய தந்­தையை பரா­ம­ரிக்க எவரும் முன்­வ­ர­வில்லை.

இந்­நி­லையில் தீவி­ர­மாக சிந்­தித்த குவோ ஷிஜுன், குறிப்பிட்ட பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்தை அணுகி தனது நிலையை விப­ரித்­துள்ளார்.
அவ­ரது நிலை­மையை அறிந்து அவர் மீது அனு­தாபம் கொண்ட பல்­க­லைக்­க­ழக நிர்­வாகம், பல்­க­லைக்­க­ழக வளா­கத்தில் குவோ ஷிஜுனுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த அறையில் அவ­ரது தந்­தையை வைத்து பரா­ம­ரிப்­ப­தற்கு அவ­ருக்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

தற்­போது குவோ ஷிஜுன் பல்­க­லைக்­க­ழக வளாகத்திலுள்ள தனது அறையில் தனது தந்தையை தங்க வைத்து பாடசாலை பாடங்களிடையே அவரை கவனித்து வருகிறார்.

அவர் தனது நண்பர்களிடமும் உறவினர் களிடமும் பணத்தைக் கடனாகப் பெற்றே தனது கல்வியைத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments