anai

பிரித்தானியா செல்கின்றமைக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்த வயோதிப தம்பதி ஒன்றை மிரட்டி, தங்க நகைகள், ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்த கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது.

இராணுவ புலனாய்வாளர்கள் போல் காட்டிக் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் கொழும்பு -02, பிரேபுரூக் இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஓட்டோ ஒன்றில் வயோதிப தம்பதியை பலாத்காரமாக ஏற்றி, கொள்ளுப்பிட்டி நோக்கி செல்ல சாரதிக்கு உத்தரவிட்டனர்.

புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றார்கள் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவார்கள் என்று வயோதிப தம்பதியை மிரட்டிய பேர்வழிகள் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப வேண்டுமானால் உடைமையில் வைத்திருக்கின்ற நகைகள், பணம் ஆகியவற்றை தர வேண்டும் என்று மிரட்டினார்கள்.

வைத்திருந்த நகைகள், பணம் ஆகியவற்றை வேறு வழி இல்லாததால் வயோதிப் தம்பதி இந்நபர்களிடம் கொடுத்தது.

பின்னர் இந்நபர்கள் சாரதியை அடித்து விழுத்தி விட்டு ஓட்டோவுடன் கிளம்பி போனார்கள்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து வயோதிப தம்பதி முறையிட்டது.

மூன்று நாட்கள் கழித்து ஓட்டோ சாரதி பொலிஸ் நிலையத்துக்கு வந்து இருக்கின்றார். பறித்துச் செல்லப்பட்ட ஓட்டோ மாலபேயில் கிடந்ததை கண்டார் என்று பொலிஸாருக்கு சொன்னார்.

பொலிஸார் புலனாய்வுகளை முடுக்கி விட்டனர். அப்போது இச்சாரதியுடன் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர் என்றும் கொள்ளை அடித்துச் சென்றவர்கள் இவரின் சகாக்கள்தான் என்றும் அதிரடியாக கண்டு பிடித்தனர்.

தொடர்ந்து இச்சாரதியின் இரு சகாக்களும் கைது செய்யப்பட்டனர்.

Comments