anaicoddai.com

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 14ம் திகதி புதுப் பொலிவுடன் திறந்து வைக்கப்பட்ட கிளிநொச்சி புகையிரத நிலையத்தின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளதாக பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இப்புகையிரத நிலையம் இந்தியாவின் கடனுதவியின் கீழ் சுமார் 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், அண்மையில் கட்டப்பட்ட இந்த புகையிரத நிலையத்தின் மலசல கூடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வீதிகளில் தேங்கி நிற்பதால் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு வரும் உள்நாட்டு பயணிகள் மாத்திரமன்றி வெளிநாட்டு பயணிகளும் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியும் இது வரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் கவனம் செலுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments