anai1

பாடசாலை மாணவனினால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவத் தலைவர் தலையில் படுகாயமுற்றநிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று பகல் இடம் பெற்றுள்ளது .

அளவெட்டியில் உள்ள பிரபல்யமான பாடசாலையொன்றின் மாணவத் தலைவன் சக மாணவன் ஒருவனிடம் காலணி அணியாதது சம்பந்தமாக கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரமுற்ற மற்றைய மாணவன் அருகில் இருந்த பைப்பினால் மாணவத் தலைவனின் தலையில் அடித்துள்ளார் .

இதனால் படுகாயம் அடைந்த மாணவன் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

குறிப்பிட்ட இந்த சம்பவம் பாடசாலை மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Comments