anaicoddai

சென்னையில் இயேசு சிலை ஒன்றிலிருந்து ரத்தம் வடிந்தது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது.

இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்து பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது.

அதை பார்த்த கன்னியாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர், பின்னர் இந்த தகவல் காட்டுத் தீ போன்று பரவியவுடன், பொதுமக்கள் கூட்டம் படையெடுத்தது.

அப்போது(5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவசமடைந்ததுடன், சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர்.

வெளியூர்களுக்கும் இத்தகவல் பரவவே, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சிறப்பு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

Comments