murder
ஆந்திர மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளை உறவினர் ஒருவரால் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்சயா, சுரி மற்றும் குஷி என்ற அச்சிறுமிகளுக்கு முறையே 9, 6 மற்றும் 4 வயது. இவர்கள் மூவரும் அண்ணன் தம்பி மூவரின் குழந்தைகள் ஆவர்.
இவர்கள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக நிசாமாபாத் மாவட்டத்திற்கு குடும்பத்தோடு வந்திருந்தனர். அங்கு திருமண மண்டபத்திற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த இவர்களை நரேந்திர ரெட்டி என்னும் உறவினர் தன்னுடைய காரில் ஊரை சுற்றி காட்டுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

Comments