anaicoddai
தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதே அறையில் 14 வயது மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று ஹாலி எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஹாலி எல அம்பவக்க சமகிபுர பிரதேசத்தைச் சேர்ந்த சரணி திசாநாயக்க (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இச் சிறுமியின் தந்தை இதே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சிறுமியின் தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் செய்து வரும் நிலையில் சம்பதினத்தன்று இச் சிறுமி தனது சகோதரனை வீட்டு முற்றத்தில் விளையாடுமாறு கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பதுளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments