தண்ணீர்

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கப்போவதால் குளிர்பானங்கள், தர்பூசணி பழங்களின் விற்பனையும் சூடுபிடிக்கின்றது.

கடந்த ஆண்டு போதிய அளவுக்கு மழை இல்லாததால் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

காலையிலேயே வெயில் கடுமையாக இருப்பதால் வெளியே தலை காட்டவே மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தின் நான்கு திசைகளை சுற்றியும் மலைகள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் குளிர் நிலவினாலும், பகலில் வெயிலின் தாக்கம் இங்கு அதிகளவில் உள்ளது. குளம், குட்டை, கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கிறது. இதனால் பகல் நேரங்களில் கானல்நீர் வீசி வருகிறது.

கடந்த ஒரு வாரமாகவே சேலத்தில் கடுமையான வெயில் நிலவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் காரணமாக குளிர்பானம், ஜுஸ், இளநீர், ஐஸ்கிரீம், மோர் ஆகியவை விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போது திண்டுக்கல் நகரின் பெரும்பாலான இடங்களில் தர்பூசணி விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

ரசாயன கலவை நிறைந்த குளிர்பானங்களை விட இயற்கையாக கிடைக்கும் இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரி போன்றவை தாகத்தை தணிப்பதுடன் உடல் உஷ்ணத்தையும் போக்கும் என்பதால் இதனை பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்டு வருகின்றனர்.

Comments