யாழ் ஆனைக்கோட்டை
அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நபர் ஒருவர் 25 ஆண்டுகள் சிறையில் இருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் கடந்த 1989ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக டெரிக் டீக்கன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் 25 ஆண்டுகளை சிறைக்கம்பிகளுக்கு பின் கழித்த அவர், நிரபராதி என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

சிறைத்தண்டனையால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான டீக்கன், செய்யாத குற்றத்துக்காக தனக்கு தண்டனை வழங்கியதற்காக இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், சிறையில் இருந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.6 கோடி வீதம் மொத்தம் ரூ.150 கோடி நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Comments