china
இலங்கையில் தமிழ்ப் பயின்ற சுந்தரன் என அழைக்கப்படும் பேராசிரியர் சுன் குவோஜியாங் காலமாகியுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் சுன் குவோஜியாங் கடந்த 8 ஆம் திகதி பெய்ஜிங்கில் காலமானார். இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சீன வானொலி தமிழ்ப் பிரிவில் வேலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப் பெயரில் “சுந்தரன்” என்று அழைக்கப் படும் அவர் 1940 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி சீனாவின் ஷாங்காய் நகரில் பிறந்தார்.

1963 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் அவர் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் தமிழ் அறிவிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக பணி புரிந்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2 ஆண்டுகள் இலங்கையில் தமிழ் மொழியை முறையாக பயின்றவர் இவர்.பேராசிரியரான சுந்தரன் சீன மொழிபெயர்பாளர் குழுவின் உறுப்பினர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழிலில் முனைவர் பட்டம் பெற்றார்.

1983 ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகள் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழ்ப் பிரிவில் தலைவராக இருந்த போது பல அரிய தமிழ் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் “திருக்குறள்” நூலை சீன மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். தமிழ் கற்கும் சீன மாணவர்களுக்கான பாடநூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

தமிழை துச்சமாக நினைக்கும் தமிழர்களுக்கு மத்தியில், சீனாவில் தமிழ் மொழியின் புகழ் பரப்பிய பேராசிரியர் சுந்தரனின் மறைவு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments