jaffna girl
ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த CONCHITA WURST என்ற பாடகி EUROVERSION 2014 போட்டியில் 25 மில்லியன் பவுண்டுகளை வென்றுள்ளார்.

25வயதான இந்த நபர், பிறப்பில் ஒரு ஆணாக இருந்தாலும் தற்போது பெண்ணாக மாறியுள்ளார்.

தாமஸ் நிவ்ரித் என்ற பெயருடன் வாழ்ந்த போதிலும், அவர் சிறுவனாக இருக்கையில் தனிமையில் தன்னை பெண்ணாக கருதி கொண்டு, பெண்களின் உடைகளையே விரும்பி அணிந்துள்ளார்.

அவர் பாடகர் குழுவில் இருந்த போதிலும், அவர் STAR MANIA என்ற ஆஸ்திரிய நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் புகழ் பெற்றுள்ளார்.

25 வயதாக இருக்கையில், பெண்ணாக மாறிய, தனது பெயரையும் கன்சித்தா என்று மாற்றிக்கொண்டார்.

கன்சித்தாவிற்கு இடையூறாக இருந்தது அவரது மீசையும், அடர்ந்த தாடியும் தான், அதனால் அவர், முதலில் பல பேரால் கேலி செய்யப்பட்டபோதிலும், அதைப்பற்றி கவலை கொள்ளாமல் பாடகிகள் குழுவில் கன்சித்தா என்ற பெண் பெயரில் சேர்ந்து பாடல்களை தொடர்ந்து பாடிவந்தார்.

EUROVERSION 2014 மேடைக்கச்சேரி பாட்டுப்போட்டியில் கலந்து கொண்ட அவர், மீசை தாடியுடன் பெண் உருவத்துடன் தோற்றமளித்ததை கண்ட பாடல் ரசிகர்கள் ஒரு புதுமையாகவும் அவருடைய பாடல்களை பலத்த கரகோஷத்துடனும் வரவேற்றனர்.

அவர் சிறந்த பாடகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 25 மில்லியன் பவுண்டுகள் பெற்றார்.

டுவிட்டர் சமூகவலைதளத்தில் அவருக்கு 5,384,678 பேர் விருப்பம் தெரிவித்து டுவிட் செய்துள்ளனர்.

Comments