dog_
அமெரிக்காவில் பார்வை இழந்த நபருக்கு துணையாக இருந்த அவரது செல்ல நாய்க்கும் பட்டம் வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வில்லியம் ஓ டொன்னெல் (31)என்ற நபர் வசித்து வருகிறார்.

பிறவியிலேயே கண் பார்வையை இழந்த இவர், தனது சோகத்தை மறந்து மிகுந்த தன்னம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் ஆரம்ப கல்வியை தொடங்கினார்.

இதன்பின் பிரபல பல்கலைக்கழகமான “யூமாஸ் பாஸ்டனில்” தன் பட்டப்படிப்பை முடித்த அவருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் வில்லியமிற்கு பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருந்த அவரது செல்ல நாய்க்கும் பல்கலைக்கழக நிர்வாகம் கவுரவ பட்டம் வழங்கி மகிழ்வித்துள்ளது.

Comments