prince
துபாய் நாட்டு இளவரசர் முகமது அல் மக்தும், தான் அகதி பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று அறிவித்துள்ளார்.

பாலஸ்தீன நாட்டிலிருந்து காலிலா அரபு என்ற பெண் துபாயில் அகதியாய் குடிபெயர்ந்து அந்நாட்டின் தலைநகர் அருகே தெருவோரத்தில் வளர்ந்து வந்தார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் தலைநகர் அருகே உள்ள பின்தங்கிய பகுதிகளில் அறக்கட்டளை பணிகளை துபாய் மன்னர் ரஷீத் அல் மக்தும்மின் இரண்டாவது மகனான இளவரசர் முகமது அல் மக்தும் பார்வையிட வந்துள்ளார்

அப்போது இப்பெண்ணை சந்தித்த அவர் காதல் வயப்பட்டுள்ளார்.இதன்பின் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியுள்ளார்.

ஆனால் இப்பெண்ணை ஏற்க துபாய் மன்னர் மறுப்பு தெரிவித்தாகவும், அவரை மணந்தால் சொத்தில் பங்கில்லை என மக்துமிடம் கூறியதாகவும் முன்பு தகவல்கள் வெளியானது.

எனினும் தனது காதலில் நிலையாக அல் மக்தும் இருந்ததால், தற்போது இவரின் திருமணத்திற்கு மன்னர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

Comments