ka
பீஜிங்:வீட்டுக்குள் பட்டு பூச்சிகளை வளர்த்து பட்டு நூல் தயாரிப்பதை போல, சீன பெண் ஒருவர் தனது வீட்டுக்குள் ஒரு லட்சம் கரப் பான் பூச்சிகளை வளர்த்து, சீன மருந்து கம்பெனிகளுக்கு அனுப்பிவருகிறார்.சீனாவின் கிழக்கே பியூஜியான் பிராந்தியத்தை சேர்ந்தவர் யுவான் மெக்சியா (37) . இவர் ஒரு மருந்து கம்பெனியில் பணியாற்றுகிறார். தனது வேலை நேரம் போக, மீதியுள்ள நேரங்களில் சீன மருந்துகளைத் தயாரிக்க உதவும் கரப்பான் பூச்சிகளைத் தனது வீட்டுக்குள் வளர்த்து வருகிறார்.ஒரு லட்சம் கரப்பான் பூச்சிகளை வளர்த்து வருவதாக கூறும் யுவான், அவை எனது குழந்தைகள் என்று கூறுகிறார். கரப்பான் பூச்சிகளை வளர்ப்பதற்காக ஒரு வீட்டை ஒதுக்கிவிட்டு, சீகியான் கவுன்டியில் யுவான் மற்றொரு வீட்டில் வசிக்கிறார். நன்கு வளர்ந்த கரப் பான் பூச்சிகளை ஒரு வாளி தண்ணீரில் போட்டு கொன்றுவிட்டு, பின்னர் அவற்றை வெயிலில் காயவைத்து பேக் செய்து, சீன மருந்து கம்பெனிகளுக்கு கிலோ 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவருகிறார். அவர்கள் அவற்றின் மூலம் மருந்துகள் தயாரிக்கின்றனர் என்று யுவான் கூறுகிறார். .அமெரிக்காவில் காணப் படும் பெரிய இறக்கை உடைய கரப்பான் பூச்சியின் பால்மெட்டோ புழுக்களை தண்ணீரில் நீண்ட நேரம் ஊறவைத்து அவற்றை ஈரப்பதமான நிலையில் மருந்து கம்பெனிகளுக்கு அனுப்பி வருவதாகவும் யுவான் தெரிவித்துள்ளார்.

Comments