kkk-600x450கண் பார்வையற்றவர்களுக்கு தம் பணிகளை இலகுவாக மேற்கொள்ள உதவும் செயற்கை கண்ணாடி ஒன்றை இலங்கையர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.கைத்தொலைபேசி போன்ற ஒரு கருவியுடன் இயங்கும் இந்த புதிய செயற்கை கண்ணாடியை அடுத்த சில வாரங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாக இதனைக் கண்டுபிடித்துள்ள யூ.எல்.எம். அனஸ் தெரிவித்தார்.

 

புதனன்று கொழும்பு மருதானை சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் தலைவர் என்.எம். அமீனின் ஏற்பாட்டில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இலங்கையில் கண் தெரியாதிருக்கும் இரண்டு லட்சம் பேருக்கு இந்த செயற்கை கண்ணாடி ஒரு வரப்பிரசாதமாக அமையும் என ஏ.எஸ்.ஏ. சர்வதேச, தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகளான யூ.எல்.எம் அனஸ் மற்றும் எம்.ஏ.எம். நில்காரும் செய்தியாளர் மகாநாட்டில் தெரிவித்தனர். மேலும் அவர்கள் தெரிவித்ததாவது, எமது கண்டுபிடிப்பு பற்றி அரச அமைச்சர்களது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். அவர்களது முன்னிலையில் விரைவில் இதனை அறிமுகஞ் செய்து வைக்கவுள்ளோம்.ஒரு கண்ணாடியின் விலை 17000 ரூபாவாகும்.

 

இதற்குத் தேவையான மூலப்பொருட்கள் சிலவற்றை வெளிநாடுகளிலிருந்து பெற்றால் உற்பத்தி செலவு குறையும்.உலகில் 37 மில்லியன் பேர் கண்பார்வையற்றிருக்கின்றார்கள் எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு இதனை அனுப்பி வைக்க உத்தேசித்துள்ளோம் என்றார்.

Comments