mahi tem (1)ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட முன்னாள் சர்வாதிகாரி ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச நேற்றுக் காலை சிலாபம் முன்­னேஸ்­வரம் கோயி­லுக்கு சென்­று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். கோயில் பூச­க­ரிடம் ஆசிர்­வாதமும் பெற்­றுக்­கொண்­டார். அவருடன் மனைவி ஷிரந்தி ராஜ­பக்ச மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்சவும் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

ஆட்சியை இழந்த பின்னர், இப்பொழுது ராஜபக்ச இரண்டு இடங்களிற்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் கூட்டாளிகளை பார்க்க சிறைச்சாலைகளிற்கும், ஆலயங்களிற்கும்தான் சென்று கொண்டிருக்கிறார். அண்மையில் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு சென்று தங்கமுலாம் பூசப்பட்ட வேல் ஒன்றை காணிக்கையாக செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments