exதனது அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் செய்த பெண்ணின் தம்பியுடன் தலைமைறைவாகியுள்ளார் கில்லாடித் தங்கை. யாழ் நாவலர் வீதியைச் சோ்ந்த அரச உத்தியோகத்தரான இளைஞனுக்கு பெற்றோர் கல்யாணத் தரகர் மூலம் திருமணம் பேசி நிச்சயித்திருந்தனர்.

ஏப்ரல் மாதம் திருமணமும் அதே நாள் திருமணப்பதிவும் என திகதியும் குறித்ததாகத் தெரியவருகின்றது. இதற்காக யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபத்தையும் ஒழுங்கு செய்து திருமண அட்டையும் அச்சிட்டு உறவினர்கள் நண்பர்களுக்கும் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில் இளைஞனின் இளைய சகோதரியான 18 வயது மாணவியை காணவில்லை என பெற்றோர், இளைஞன் மற்றும் சகோதரர்களும் தேடத் தொடங்கியுள்ளனர். அந் நேரத்தில் மாணவி தனது சகோதரர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அண்ணியின் தம்பியுடன் தங்கியிருப்பதாகவும் அவரையே திருமணம் முடித்துத் தரும்படியும் அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிளை மற்றும் பெற்றோர் பெண்ணின் வீட்டாருடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளனர். இதே வேளை இச் சம்பவத்தால் திருமணம் குழம்பும் நிலையை அடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Comments