11060049_793525920737245_1708319540963355824_nகாதல் தோல்வி காரணமாக யாழ்ப்பாண வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிகளவான நித்திரை மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.

வடலியடைப்பு பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கணநாத் (வயது23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மரணம் தொடர்பில் சுயமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மனவிரக்தியில் அதிகளவில் நித்திரை மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக விசாரணையின் போது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

Comments