ragini

அரியான், நிமிர்ந்து நில் படங்களில் நடித்திருப்பவர் ராகினி திவேதி. அவர் கூறியது:நான் வில்லங்கமான ஆள் கிடையாது. நடிகர் ரானாவுக்கும் எனக்கும் காதல் என்றும் அதனால் ரானாவுடனான இன்னொரு நடிகையின் (திரிஷா) காதல் முறிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. எதையும் வெளிப்படையாக பேசும் குணம் படைத்தவள் நான். ஆண் பெண் நட்பு என்பது சகஜமானது. யாரிடமும் நான் நட்பாக பழகுவேன். அந்த நட்பைத்தான் காதல் என்று கொச்சைபடுத்துகிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளில் ஹீரோயின்கள் எளிதாக இலக்காகிவிடுகிறார்கள்.

பிரச்னை வந்தபோது அமைதியாக இருந்தது ஏன் என்கிறார்கள். அதற்கு காரணம் அவற்றை தவிர்க்க வேண்டும் என எண்ணியதுதான். ரானாவுடனான எனது நட்பு வெளிப்படையானது. சினிமாவுக்கு வந்த முதல்நாளிலிருந்தே நான் வெளிப்படையாகவே எல்லாவற்றையும் பேசுவது மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஸ்டிரைட் பார்வேட். நண்பர் என்ற முறையில் அவருடன் இருக்கும் ஒரு போட்டோவை நான் இணைய தளத்தில் வெளியிட்டதால் உடனே லிங்க் அப் இருப்பதாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல. யாருடைய காதல் முறிவுக்கும் நான் காரணமில்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நிறைய நடிகர்களுடன், சக மனிதர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என்னிடம் நிறைய இருக்கிறது.

அதை வேண்டுமானால் தருகிறேன். அதையும் இதுபோன்றே பரபரப்புக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இவ்வாறு ராகினி திவேதி கோபமாக கூறினார்.
ரானா திரிஷா காதல் பிரச்னை ஓய்ந்து திரிஷாவுக்கு வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் மீண்டும் ரானா காதல் விவகாரம் குறித்து ராகினி திவேதி விளக்கம் அளித்திருப்பது தேவையில்லாத சர்ச்சையை தூண்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கிடையில் திரிஷாவுக்கு திருமண வாழ்த்து சொல்லி இருக்கிறாராம் ரானா.

Comments