1கனடாவினை தலைமையகமாகக் கொண்டு-பெண்கள் 20 (girls 20) என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இவ்வமைப்பானது தற்போது 27 நாடுகளில் 18 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்ட பெண்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று,

பின்னர் அவர்களுக்கு பல கட்டமாக பரீட்சைகளை நடத்தி-அவற்றிலிருந்து இறுதியாக ஒரு பெண் உறுப்பினரை தேர்வு செய்கின்றது.

இதில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் செயற்பாடுகளாவன

அவர்கள் வசிக்கும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பெண்களின் உயர் கல்வி, தொழில்,ஊதிய வளர்ச்சி, உயர்பதவி, போன்றவற்றிக்காகவும் வாதாடி வருகின்றனர். இவ்வமைப்பானது ஒவ்வொரு வருடமும் மீள் தெரிவினை மேற்கொண்டு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்து வருகின்றது.

இவ்வமைப்பினால் பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட 2015 ம் ஆண்டுக்கான புதிய உறுப்பினரைத் தேர்வு செய்யும் பரீட்சையில் கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த,செல்வி ஸ்ரனிலாஸ் அனுசிகா அவர்கள் இறுதித் தேர்வில் தெரிவு செய்யப்பட்டு-பிரான்ஸின் பெண்கள் 20 அமைப்பின் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய,பெற்றோர்கள் அல்லைப்பிட்டி-மண்கும்பானைச் சேர்ந்தவர்கள் என்பது எமக்கு பெருமை சேர்க்கும் தகவலாகும்.

செல்வி அனுசிகா ஸ்ரனிலாஸ் அவர்கள்-இம்முறை துருக்கியில் நடைபெறவுள்ள-பெண்கள் 20 அமைப்பின் பொதுக்கூட்டத்திற்கு, பிரான்ஸ் நாட்டின் உறுப்பினராக கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து சென்று எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்த அனுசியாவிற்கு எங்களுடன் சேர்ந்து வாசகர்களாகிய நீங்களும் வாழ்த்தி மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Comments