jaffna1-300x130-615x267வாள்களுடன் ஆதவன் குழுவின் 6 பேரை சாவகச்சேரிப் பொலிசார் கைது செய்துள்ளனர்.இவர்களின் மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் சாவகச்சேரிப் பகுதியில் இயங்கும் ஆதவன் என்னும் ஒருவனின் தலைமையிலான குழு என்றும் இக் குழுவினர் அப்பகுதியில் பல நாட்டாமை வேலைகளில் ஈடுபடுபவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைதடியில் ஒருவரைக் கடத்தி ஒரு நாள் முழுவதும் தாக்கி கடத்தியவரிடம் இருந்து பெற்ற தகவல் மூலம் வடமராட்சியிலும் ஒருவரைக் கடத்தி தாக்கிய குற்றச்சாட்டில் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புடைய மேலும் 7 பேரைப் பொலிசார் தேடி வருவதாகத் தெரியவருகின்றது.

Comments