3dayபிறந்து மூன்றே நாளான குழந்தையொன்றை துணிப்பையொன்றிற்குள் வைத்து சிறுவர் காப்பகம் ஒன்றின் வாசற் கதவில் தொங்கவிட்டுச் சென்ற சம்பவம் அநுராதபுரத்தில் நடந்துள்ளது. நேற்று இந்த குழந்தை மீட்கப்பட்டது.

காப்பக ஊழியர் ஒருவர் கண்டதின் பலனாக மீட்கப்பட்ட குழந்தை அநுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் அதேவேளை குழந்தையின் தாயைத் தேடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments