யாழ்

தங்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது தங்களைப் புறக்கணித்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முன்னால் போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளது என ஜனநாயகப் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகப் போராளிகளின் முக்கியஸ்தரான துளசியின் ஒருங்கிணைப்பில் இன்று மாலை ஒன்று கூடிய விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளின் முக்கியஸ்தர்கள் ஜனநாயகப் போராளிகளின் இணைப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தியாதரன் அவர்களின் இடத்தில் இருந்து ஊடகத்திற்கு பேட்டி வழங்கியுள்ளனர்.

Comments