imagesபிரித்தானியாவில் சாலையில் ஏற்பட்டுள்ள 66 அடி பள்ளத்தால் குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் ஹெர்ட்போர்ட்ஷிரி பகுதியில் உள்ள செயிண்ட் அல்பைன்ஸ் சாலையில் கடந்த வாரம் சிறிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த பள்ளம் தற்போது 66 அடி நீளத்துக்கு விரிவடைந்துள்ளது. மேலும் சாலையில் ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மின்சாரம், தண்ணீர், போன்றவை தடைபட்டுள்ளன. முதல்கட்டமாக 5 குடியிருப்புகளில் உள்ள 20க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தீயணைப்புத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, சாலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பள்ளத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை .
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
50க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
எனினும் இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Comments