thankalai_kaduvala_002தங்காலையில் குடாவெல்ல துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஆறு படகுகள் சேதமடைந்துள்ளதாக தங்காலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நின்ற படகுகளே தீ விபத்தினால் சேதமடைந்துள்ளன.

தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

எனினும் தீ விபத்தினால் படகுகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.

பலநாள் தங்யிருந்து மீன்பிடிக்கக் கூடிய பெறுமதியான படகுகளே விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments