prison4தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இன்றைய தினம் பூரண ஹர்த்தால் வடக்கு,கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டது. அதற்கமைய யாழ். மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் கைதிகளின் விடுதலைக்காக விசேட பூஜைகள் இடம்பெற்றன.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இன்று யாழ். வரலாற்று சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்திலும் விடேச பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.இதனை வடக்கு,கிழக்கு மாகாணத்தின் தமிழ் அரசியல்கள் தொடர்பான அமைப்பும், காணாமல் போன உறவுகளின் அமைப்பின் எற்பாட்டிலும் இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

Comments