nஇஞ்சி இடுப்பழகி படத்துக்காக கூடின பதினேழு கிலோ எடையில், இதுவரை ஒன்பது கிலோ குறைச்சிட்டேன். ‘இன்னும் எட்டு கிலோ குறைக்கணும்’னு இயக்குநர் ராஜமௌலி சொல்லியிருக்கார். ‘பாகுபலி 2’ டிசம்பரில் தொடங்குகிறது. அதற்காக உடம்பை குறைக்கிற உடற் பயிற்சி செய்கிறேன் என்றார்.

‘பாகுபலி 2’ படப்பிடிப்பு உடனடியாக இருந்திருந்தால், இப்படி ஒரு படம் பண்ணியிருக்க வாய்ப்பில்லை. அதுக்கு டிசம்பர் வரை நேரம் இருக்கு அதுக்குள்ள உடம்பை கூட்டி குறைக்கலாம் என நினைத்தேன். இதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டேன். மூணு வேளைக்கு ஆறு வேளை சாப்பிட்டாலே ஈஸியா குண்டாகிடலாம்னு நினைத்தேன். ஆனா, அது தப்புனு வொர்க் அவுட் பண்ணும்போதுதான் தெரிஞ்சுது என்று கவலையாக கூறினார் அனுஷ்கா.

Comments