strike6வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்திலிருந்து கடல்நீரை சுத்திகரித்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீராக எடுத்துச்செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச மக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அடையாள உண்ணாவிரத போராட்டமானது, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று இடம்பெற்றது.

குறித்த பிரதேசத்திலிருந்து கடல்நீரை கொண்டுசெல்லும்போது, தமது வாழ்வாதார தொழிலான மீன்பிடி பாதிக்கப்படுமென பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடல் நீரை சுத்தமாக்குவதற்காக அதி வலு கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்போது, அதனால் கடல் வளம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுமெனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், தமது ஜீவனோபாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோமென மருதங்கேணி மக்கள் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Comments