12123

யாழ்ப்பாணம் உட்பட்ட பல பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமையான பாலியல் வல்லுறவுகள் பற்றிய அதிர்ச்சித் தகவல் இங்கு தரப்பட்டுள்ளது.

யாழ் நகரப்பகுதிக்கு பல்வேறு தேவைகளுக்காக யுவதிகளும் குடும்பப் பெண்களும் வந்து செல்கின்றனர்.

நகரப்பகுதிகளில் உள்ள புடவைக்கடைகள், அழகுசாதனப்பொருட்கள் விற்கும் கடைகள், நகைக்கடைகள் போன்ற கடைகளுக்கு அவர்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக உள்ளே செல்கின்றார்கள். இக் கடைகளுக்குள் செல்லும் பெண்களில் ஒரு சிலருக்கு அக் கடைகளில் தமக்கு மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் சிறிய பொருட்களைக் கண்டவுடன் அவற்றை இலகுவாக மறைத்து வைக்கலாம், யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற சபல புத்தி ஏற்படுகின்றது.

குறிப்பாக ‘பெயர்அன்லவ்லி‘, நகம் அழகுபடுத்துப் பொருட்கள், உள்ளாடைகள், சிறிய ரீசேட்டுக்கள், காதுத் தோடுகள் போன்றவற்றில் அவர்களுக்கு ஏற்படும் சிறு சபலத்தால் அவர்கள் தமது வாழ்க்கையையே இழந்து போகும் பரிதாபத்திற்கு உள்ளாகின்றார்கள். இப் பெண்களுக்குத் தெரியாது தாம் கடைக்குள் இருக்கும் கண்காணிப்புக் கமராக்களால் கண்காணிக்கப்படுகின்றோம் என்பது.

குறித்த பெண்கள் கடைக்குள் யாரும் தம்மைக் கவனிக்கவில்லை என்ற எண்ணத்தில் இவ்வாறான சிறிய பொருட்களை தமது ஆடைகளுக்குள்ளோ, அல்லது தமது கைப்பைக்குள்ளோ திணித்துக் கொள்கின்றார்கள்.

அதன் பின்னர் அவர்கள் கடையை விட்டு வெளியேறும் போது கடை முதலாளிகளால் உள்ளே அழைக்கப்பட்டு அவர்களது களவுபற்றிய காட்சி அவர்களுக்குக் காட்டப்படும். அதன் பின்னர் குறித்த பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் சொல்லில் வடிக்க முடியாதபடி நடைபெறும்.

யாழ் நகரப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் கீழ்த்தளத்தில் வியாபாரநடவடிக்கையும் மேல்தளத்தில் அக்கடைக்கான பொருட்களைச் சேமித்து வைக்கும் பகுதியும் ஓய்வு எடுக்கும் பகுதிகளும் உள்ளன.

அக்கடைக்கு பொறுப்பாக இருக்கும் நபருக்கோ அல்லது முதலாளிக்கு களவெடுத்த பெண் யாராவது அகப்பட்டாள் அவர்களுக்கு அன்று பெரிய கொண்டாட்டமாகவே அமைந்திருக்கும். களவெடுத்து பிடிக்கப்பட்ட பெண்ணை தமது ஓய்வு அறைக்குள் கொண்டு சென்று கமராவில் இடம்பெற்ற காட்சியைக் காட்டி அவளைப் பாலியல் உறவுக்கு அழைப்பார்கள் இக் கொடூரமானவர்கள்.

அதற்கு பெண்கள் உட்படாவிடால் உடனடியாகப் பொலிசாரிடம் ஒப்படைக்கப் போகின்றோம் என அச்சுறுத்தல் விட்டவுடன் பெண்கள் அழுது கெஞ்சத் தொடங்குவார்கள். அந்த அழுகையுடன் அவர்களது கற்பும் பறிபோய்விட்டிருக்கும்.

அதன் பின்னர் அப்பெண்ணின் தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை இலக்கம், முகவரிகள் போன்றவை பதியப்பட்டும் அவள் நிர்வாணமாக வீடியோ எடுக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் கடைக்காரனால் விடுவிக்கப்படுவாள்.

அதன் பின்னர் அவளை வேண்டிய நேரத்தில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தி யாழ் நகரப்பகுதிக்கு வரச் செய்து தமது பாலியல்தேவைகளை நிறைவு செய்வார்கள் இந்தக் கொடூரமான முதலாளிகள்.

தாம் மட்டுமல்ல தமது நண்பர்களையும் இதில் பங்கு போடும் கொடுமையும் இடம்பெறும். இவ்வாறான கொடூர சம்பவத்தை எதிர்நோக்கிய புத்துார் நிலாவரைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி கடந்த வருடம் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான முதலாளிகள் இருக்கும் கடைகளில் பெண்களும் பணியாற்றுகின்றார்கள் என்பதும் கொடுமையான செய்தியாக உள்ளது. அவர்களுக்கும் தமது முதலாளி இவ்வாறு பெண்களை வேட்டையாடுகின்றார் என்பது அப்பட்டமாகவே தெரிந்திருக்கின்றது. இருந்தும் அவர்கள் வறுமையின் காரணமாக இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு வேலை செய்கின்றார்கள்.

யாழ் நகர்ப்பகுதிகளில் உள்ள ஒரு சில கடைகளிலேயே இந்தக் கொடூரச்சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அதிலும் வேற்று மதத்தைச் சார்ந்த ஒருவரால் நடாத்தப்படும் ஒரு வர்த்தக நிலையத்திலேயே இவ்வாறான சம்பங்கள் பல இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு யுவதிகளை வேட்டையாடிய பின்னர் தான் வேட்டையாடிய யுவதிகள் அனைவரின் நிர்வாண வீடியோக்களை தமது கைகளால் அவர்களின் உடலைத் தொடுவதை கைத்தொலைபேசியல் பெருமையுடன் தனது நண்பனுக்கு காட்டியுள்ளான் காமுகன்.

அப்போதே தன்னால் வேட்டையாடப்பட்ட யுவதி ஒருவர் தற்கொலை செய்த சம்பவத்தையும் அவன் தெரிவித்துள்ளான். அவன் காட்டிய வீடியோக்களில் குறைந்தது 30ற்கும் மேற்பட்ட யுவதிகளின் காட்சிகள் அடங்கியிருந்துள்ளன. இதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளால் இச் சம்பவம் பலருக்குத் தெரியவந்துள்ளது.

இவ்வாறானவர்களிடம் பழியாகுவதில் பல்கலைக்கழக மாணவிகளும் அடக்கம் என்பது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குறித்த காமுகனால் பல்கலைக்கழக மாணவியின் அடையாள அட்டையும் அவளது நிர்வாண வீடியோவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமக்குள் ஏற்படும் சிறு ஆசையாள் சிறிய பொருட்களை திருடியவர்களில் பெருமளவானவர்கள் ஏழைப் பெண்கள் அல்ல என்பதும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவ்வாறன அற்ப வேலைகள் செய்து தமது வாழ்க்கையைத் தொலைத்துள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

யாழ் நகரப்பகுதியில் உள்ள சில நகைக்கடை வர்த்தகர்கள் வேண்டுமென்றே இவ்வாறானவர்களைத் திருடுவதற்கு துாண்டுகின்றார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தமது நகைக்கடைக்கு நகைகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் வரும் பெண்களின் முன்னால் நமது நகைகளைப் பரப்பி வைத்துவிட்டு கவலையீனமாக இருப்பது போலும் உள்ளே செல்வது போலவும் காட்டி அவர்களை திருடச் செய்து தமது காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றிவருகின்றார்கள்.

இது யாழ் நகர்ப்பகுதிகளில் மட்டுமல்ல வடபகுதியுட்பட ஏனைய பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது. ஒப்பீட்டளவில் யாழ் நகர்ப்பகுதிகளில் மிகக்குறைவாகவே நடைபெற்றுவருவதாகத் தெரியவருகின்றது.

இதே வேளை கடந்த இருநாட்களுக்கு முன்னர் மானிப்பாய்ப் பகுதியில் உள்ள அழகு சாதனப்பொருட்கள் விற்கும் கடையில் புகுந்து திருடியதாகத் தெரிவித்து 4 பெண்களை அவர்களது இடத்திற்குச் சென்று கடைக்குள் வைத்து தமது தேவைகளை நிறைவேற்ற முற்பட்ட கடையில் வேலை செய்யும் 4 ஊழியர்களைப் பொலிசார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கடைக்காரர்களுக்கு திருடிய பெண்களின் வீடு எப்படித் தெரிந்தது என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். கடைக்குள் திருடியதாக வைத்திருந்த 4 பெண்களையும் மீட்ட பொலிசார் அவர்களையும் ஊழியர்களையும் சேர்த்து மல்லாகம் நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போது குறித்த பெண்களை 1ம் திகதிக்கும் கடை ஊழியர்களை 11ம் திகதிக்கும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் மிக உச்ச அளவில் கலாச்சாரப் பிறழ்வுகள் நடப்பதற்கு முக்கிய காரணம் இவ்வாறான ஒரு சில வர்த்தகர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நடவடிக்கையில் பெருமளவு நட்டத்தை எதிர்நோக்கி பலருக்கு வேலைவாய்ப்பளித்துக் கொண்டு இருக்கும் உன்னதமான வர்த்தகர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– See more at: http://www.newjaffna.co/moreartical.php?newsid=41445&cat=nnews&sel=current&subcat=1#sthash.zmr90YE8.dpuf

Comments