doctor
அமெரிக்காவில் டாக்ஸி சாரதியை அடித்து ரகளையில் ஈடுபட்ட பெண் மருத்துவரை மருத்துவமனை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

அமெரிக்காவின் மியாமி நகரை சேர்ந்தவர் அஞ்சலி ராம்கிஷ்சூன். ஜேக்சன் ஹெல்த் சிஸ்டம்மில் நரம்பியல் படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று உப்பர் நிறுவனத்தின் டாக்ஸி ஒன்று பயணியை அழைத்து செல்வதற்காக காத்திருந்துள்ளது.

அப்போது அந்த டாக்ஸியில் முன்பதிவு செய்யாமல் ஏறிய அஞ்சலி வண்டியை எடுக்குமாறு சாரதியிடம் கூறியுள்ளார்.

முன்பதிவு செய்யாததால் அவரை டாக்ஸியில் இருந்து இருங்கும்படி சாரதி தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி டாக்ஸி சாரதியை அடித்தும் காலால் எட்டி உதைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் டாக்ஸியில் அமர்ந்துகொண்ட அஞ்சலி உள்ளிருந்த பணம், பத்திரங்கள், சாரதியின் மொபைல் போன் ஆகியவற்றை சாலையில் வீசி எறிந்துள்ளார்.

பின்னர் பொலிசார் வந்து அவரை அழைத்து சென்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அஞ்சலியை இடைநீக்கம் செய்துள்ள ஜேக்ஸன் ஹெல்த் சிஸ்டம் அவர் மீது விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Comments