anaiநிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் இன்று புதன்கிழமை (10) போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாணசபை அலுவலகத்திற்கு எதிரில் ஒன்றிணைந்த கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார் மவாட்ட தொண்டர் ஆசிரியர்கள் பாதாதைகளை ஏந்தி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் பல இடங்களுக்கு சென்று பலரைச் சந்தித்து, எத்தனையோ மகஜர்களைக் கையளித்த போதிலும் இதுவரையில் தமது நிரந்தர நியமனத்திற்கு எதுவித தீர்வும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதோடு,தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்

Comments