th

அன்புக் கவி அரசி
சுஜிக்கு! என் எண்ணத்தில்
உதிக்கும் கன்னித் தமிழால்
சின்னக் கவி கொண்டு
வழ்த்துகின்றேன்.
வாழ்க நீ பலாண்டு.
முறை சொல்லி முற்றுகையிட
முழுமையாய் கிடைத்த
தகவல் தங்கை என்றார்கள்.
தமிழ் அரசியே
உன் பற்றும் பரிதவிப்பும்
தமிழ் மீது கொண்ட நேசிப்பும்
கண்டு உன்னை நான்
யாசிக்கின்றேன்.
எண்ணக் கருக்களளால்
இடும் கருத்துப் பகிர்வால்
என்னுள் உனக்கான இடம்
என்றும் உனக்கு உண்டு.
வண்ணத் தமிழ் கொண்டு
வார்த்தெடு நற் கவி\
எம் தமிழ் நிலைக்க
எழுது கோல் ஒன்றே
இன்றைய ஆயுதம்.
ஆயுத எழுத்தின் சொந்தம்
நாமல்லவா!. துணிவோடு
களம் இறங்கி முத்தமிழால்
பாமாலை நீ பாடி
வானுயர வேண்டுமென
வாழ்த்தி நிற்கும் அண்ணண்.
வாழ்க வளம் நலம்…!
பிரியமுடன் இவன்.

Comments