12961428_10154175162311661_5525285485112524936_o

கடந்த வார இறுதி நாட்களில் லண்டனில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த மாபெரும் லண்டன் தமிழர் சந்தை பலரது சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளது.

பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நாச்சியார் நிகழ்ச்சி அமைப்பாளர்களுடன் இணைந்து நடாத்திய இரண்டாவது லண்டன் தமிழர் சந்தை கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக கண்காட்சியாளர்கள் கலந்துகொள்ள பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிரித்தானிய தேசிய அரசியல் பிரமுகர்களான Harrow நகரபிதா Suresh Krishna, பாராளுமன்றத்தின் தலமை அமைச்சர் Chris Grayling, நிழல் நிதிமந்திரி John McDonnell, LEBARA குழுமத்தின் தலைவர் றதீசன் யோகநாதன், London மாநகர மேயருக்கான தொழில்கட்சி வேட்பாளர் Sadiq Khan, Harrow East தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Bob Blackman ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இரு நாட்களும் பல்வேறு கலை நிகழ்சிகள் நடைபெற்றன

Comments