kele

 

கிளிநொச்சி மாவட்டத்தில், கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் இடம்பெற்ற, பல்வேறு குற்றச் செயல்களில் நீதிமன்றில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு, விதிக்கப்பட்ட தண்டப்பணம் ஒரு கோடியே 87 இலட்சத்து 2000 ரூபா என கிளிநொச்சி காவல்நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.ஜே.டி. சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்று கிழமை, கிளிநொச்சி பிரஜைகள் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில், கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு கிளிநொச்சி காவல் நிலையத்தினால், வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 624 மொத்த வழக்குகளில் 382 வழக்குகள், நீதிமன்றினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, விதிக்கப்பட்ட தண்டப்பணமே மேற்படி தொகை எனவும், இன்னும் 242 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த வழக்குகளும் தீர்க்கப்பட்டிருப்பின் தண்டப்பணம் மேலும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

அந்த வகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு கசிப்பு உற்பத்திகான கோடா வைத்திருந்த குற்றசாட்டில் 34 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, 11 வழக்குகள் குற்றவாளிகாக தீர்ப்பளிக்கப்பட்டு, விதிக்கப்பட்ட தண்டப்பணம் 11 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா. நிலுவையில் உள்ள வழக்குகள் 23 ஆகும்.

மற்றும் 257 கசிப்பு உற்பத்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, 94 வழக்குகள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, விதிக்கப்பட்ட தண்டப்பணம் 54 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா. நிலுவையில் உள்ள வழக்குகள் 163 ஆகும்.

88 கஞ்சா வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, 56 வழக்குகள் குற்றம் நிரூபிக்கப்பட்டு ,விதிக்கப்பட்ட தண்டப்பணம் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா. நிலுவையில் உள்ள வழக்குகள் 32. ஆகும். பிடிப்பட்ட கஞ்சாவின் நிறை 7 கிலோ, 978 கிராம் நிறை உடையது.

198 சட்டவிரோத மணல் வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், 120 உழவு இயந்திரமும்,78 டிப்பர் வாகனமும் பிடிக்கப்பட்டன. இதில் 187 வழக்குகள் குற்றம் நிரூபிக்கப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம், 31 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா நிலுவையில் உள்ள வழக்குகள் 11 ஆகும்.

47 சட்டவிரோத சாரயம் விற்பனை. இதில், 34 குற்றம் நிரூபிக்கப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம் 15 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா. நிலுவையில் உள்ள வழக்குகள் 13 ஆகும்.

60 சட்டவிரோத மரம் கடத்தல் வழக்குகள். இதில் 35 வழக்குகள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, விதிக்கப்பட்ட தண்டப்பணம் 13 இலட்சத்து 96 ஆயிரத்து 350 ரூபா. நிலுவையிள் உள்ள வழக்குகள் 25 ஆகும்.

இவ்வாறான வழக்குகளினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, இதுவரைக்கும் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகள் மூலம் விதிக்கப்பட்;ட தண்டப்பணமே ஒரு கோடியே 87 இலட்சத்து 2000 ரூபா ஆகும்.

கிளிநொச்சி மாவட்டத்தில், ஆறு காவல் நிலைய பிரிவுகள் காணப்படுகிறது. அதில் ஒன்று கிளிநொச்சி காவல் நிலையம் இந்த காவல் நிலையப் பிரிவுக்குட்பட்ட, வழக்குகளின் மூலமே மேற்படி தொகை, தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

Comments