09-210-720x480-620x330

 

குடியேற்றவாசிகளுக்கு இருப்பிடம் அளிக்கும் பிரித்தானியாவின் திட்டத்திற்கு அமைய, 57 குடியேற்றவாசிகள் தற்போது வடக்கு அயர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் 14 குடும்பங்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்பாஸ்ட்டில் வந்திறங்கிய அனைவரும், ஐந்து நாட்கள் ஒரு சிறப்பு வரவேற்பு மையம் ஒன்றில் தங்குவர் எனவும் பின்னர் வேறு பகுதிகளுக்கு மாற்றப்படுவர் எனவும் பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசெம்hபர் மாதம், சிரிய குடியேற்றவாசிகளை கொண்ட முதலாவது குழு வடக்கு அயர்லாந்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது வடக்கு அயர்லாந்தை வந்தடைந்தடைந்த குடியேற்றவாசிகளில், 02 வயது நிரம்பிய குழந்தைகள் தொடக்கம் 50 வயது நிரம்பிய குடியேற்றவாசிகள் உள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

Comments