images-154

 

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இத்தாலிய பொலிஸார், நேற்று (வியாழக்கிழமை) நான்கு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் இத்தாலியில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டதாக இது தொடர்பில் கருத்து தெரிவித்த இத்தாலிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த வழக்கறிஞர், ‘கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ரோமில் தாக்குதல் நடத்த திட்டமிடும் படி மற்றையவர்களை கோரியுள்ளார்’ என தெரிவித்தார். குறித்த நால்வரும் இத்தாலிய பொலிஸாரால் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசாரணையின் ஒரு அங்கமாக கடந்த வருடம் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணையும் பொருட்டு இத்தாலியை விட்டு தப்பி ஓடிய ஒரு மொரொக்கோ வாசி மற்றும் அவருடைய துணைவி ஆகியோருக்கும் பிடியாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரஸ்சல்ஸில் நடத்தப்பட்டது போன்ற தீவிரவாத தாக்குதல்களில் இருந்து இத்தாலிய தப்பிய போதும், அங்கு தொடர்ந்தும் இது போன்ற சோதனைகள் மற்றும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments