arun-vijay

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் அருண் விஜய்.இயக்குனர் அறிவழகனின் பெயரிப்படாத படம் ஒன்றில் நடித்துள்ள இவரின் 36 மணி நேர சண்டைக்காட்சியும் பரவலாக பாராட்டப்பட்டுள்ளது.

ராம்சரணுக்கு வில்லனாக தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.மேலும் தற்போது கன்னட சினிமாவிலும் கால்பதித்துள்ளார்.

எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் கன்னட பதிப்பான சக்ரவ்யுஹா படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு வில்லனாக நடிக்கிறார்.இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தனித்துவமாக அனைவரும் பாராட்டும்படி இருக்குமாம்.

 

Comments