sumathஇன்று பலரும் தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரன் அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, ஒரு நாளிலையே விடுதலை செய்யப்பட்டார். இந்த விடுதலைக்கு தாம் தான் காரணம் என்று சுமந்திரன் கோஸ்டி கதை விடுகிறது. சயந்தனை வழக்காடும் படி சிவகரன் கேட்டது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருவதுடன், சிவகரனின் கைது செய்யப்பட்டதும் சுமந்திரனின் ஊடக அறிக்கை, நீதிமன்றுக்கு வருகைதந்து சிவகரனை அழைத்து செல்வது போன்ற சுகிர்தனின் நடவடிக்கை என்பன சுமந்திரனால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை.
உண்மையில் அங்கு நடந்தது என்னவெனில், சிவகரனை கைது செய்த காவல்துறை 18 மாதங்கள் உன்னை சிறையில் அடைக்கப்போவதாகவும், நீ பயங்கரவாதிகளுடன் தொலைபேசியில் பேசி இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் சிவகரனோ அதற்கான ஆதாரம் இருந்தால் கைது செய்யுங்கள் என, வழமையான பாணியில் சொல்ல, காவல்துறையும் இல்லை இல்லை உமக்கு நீர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு என சொல்ல, சிவகரனோ இவ்வாறு பதிலளித்துள்ளார். எனது தொழில், எனது அரசியல் மற்றும் மனிதவுரிமை செயற்பாடு என பலரும் தொடர்புகொள்ளும் போது என்னால் யாரையும் பயங்கரவாதி என கூறமுடியாது , ஆதாரம் இருந்தால் சிறையில் அடைக்குமாறு கூறியுள்ளார்.
இதன் பின் விசாரணை முடிவடைய, சிவகரன் நித்திரையாகி விட்டார். இந்நிலையில் காலை 6மணிக்கே நித்திரையாக இருந்த சிவகரனை எழுப்பி, உம்மை விடுதலை செய்யப்போறம் குளித்து வெளிக்கிடுமாறு கோரியதுடன், உம்மால் எங்களுக்கு கரைச்சலாக போட்டுது என்ற உண்மையையும் கூறியதுடன், உம்மை பிணையில் விடுவிப்பதாகவும் அதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியதுடன், தம்மால் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உம்மை விடுதலை செய்தால் வேறுவிதமாக மாற்றிவிடுவார்கள் என்பதாலையே போலீஸ் பிணையில் விடுவிப்பதாகவும் சட்டத்தரணி தேவை இல்லை எனவும் கூறிவிட்டனர்.
இதன் பின்னர் காலை 9மணிக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் சம்பந்தனிடம் பேச, அதன் பின்பே சம்பந்தனும் ஏனைய முக்கிய ஆளும்கட்சி முக்கிய அமைச்சர்களும் பேசியுள்ளனர்.
இப்போது சாவகச்சேரி நீதிமன்றில் சிவகரனுடைய வழக்கு நடைபெறுகிறது, இதற்கு சட்டத்தரணி தேவையில்லை. ஆனால் எங்கயோ நின்ற சயந்தன், சுமந்திரனின் தூட்டுதலால் ஓடிவந்து, ஒலிவாங்கியை ஓன் செய்து கடுமையாக வாதட, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரோ சங்கட நிலையை அடைந்து விட்டனர்.
காரணம் நீதிபதியிடம் கையளித்த அறிக்கையில் பிணையில் விடுதலை செய்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து குறிக்கிட்ட போலீசார் தாம் பிணையில் விடுதலை செய்வதாக குறிப்பிட்ட விடயத்தை கூறி, விவாதம் தேவை இல்லை என குறிப்பிட்டதுடன் சிவகரனை விடுவிக்கப்பட்டார்.
உண்மையில் சிவகரனின் விடுதலைக்கு காரணம் ஐநா பேச்சாளர் உட்பட்ட 40 மேற்பட்ட மனிதவுரிமைகள் அமைப்பு என்றால் பலருக்கும் தெரியாது. சிவகரனை விடுதலை தொடர்பில் 3தடவை உரியவர்களுக்கு தொலைநகல் ஐநா பேச்சாளரால் அனுப்பப்பட்டுள்ளது இதுவே உண்ம்மையும் கூட, இங்கு சுமந்திரன், சயந்தன் மற்றும் சுகிர்தன் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் சிவகரனை சுமந்திரன் விடுவிக்கவில்லை என்பதுடன் கைதுக்கு காரணமானவர் என்பதே உண்மையாகும்.

Comments